Tuesday, November 3, 2009

நம்ம வீட்டு கல்யாணம்

பட்டு பேக் அகாடமி வழங்கும் நம்ம வீட்டு கல்யாணம்

இன்னிக்கு நம்ம வீடு கல்யாணம் நிகழ்ச்சில இரு மனங்கள் இணைந்து மகிழ்ந்த இவர்களுடைய திருமணம் பற்றி நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்கள் ... வாங்க இவங்க என்ன சொல்றாங்கன்னு கேட்கலாம்




திருவாளர்: எங்களோட கல்யாணம் ஒரு காதல் கல்யாணம் ... ஒரு திருட்டு மாங்கா பறிக்கும் போது தான் எங்களோட முதல் சந்திப்பு நிகழ்ந்தது ...




என்னவோ தெரியல இவள பார்த்த உடனே பிடிச்சிபோயிடுச்சி ... அதனால அந்த மாங்காவா நான் அவளுக்கு விட்டு கொடுத்துட்டேன் .. அப்புறம் அவள நான் தொடர்ச்சியா சந்திப்பதற்கு வாய்ப்புகிடைக்கல ... ஏன்னா அவ வேற கூட்டம் நான் வேற கூட்டம் ...

திருமதி: ஹா ஹா ... இவர் பொய் சொல்லுகிறார் ... இவர்க்கு ஒரு நாள் என்ன பார்கலைன்னா கூட தூக்கமே வராது ... எந்த மரத்துலயாச்சும் உக்கார்ந்து




என்ன பார்த்துகிட்டே இருப்பார் ... அப்புறம் மரத்துக்கு மரம் கிளைக்கு கிளை தாவி என் கவனத்த ஈர்த்துகிட்டே இருப்பார் ... அப்புறம் எனக்கும் ஒரு மாதிரியா இவர் மேல காதல் வந்திடுச்சி ...

திருவாளர் : இவளுக்கு என் மேல காதல் வரதுக்குள்ள நான் பட்ட பாடு கொஞ்ச நஞ்சம் அல்ல ... அந்த தெருகோடி இனிப்பு புளியமரத்துல குத்தகை காரனுக்கு தெரியாம இனிப்பு புளியாம்பழம் பறிச்சி கொடுத்து தான் இவளுக்கு நான் காதலனாவே ஆனேன் ...

திருமதி : ஹா ஹா ஹா ....


பார்த்தீங்களா .. இவங்களோட காதல் அனுபவம் எவ்ளோ மொக்கையா இருந்ததுன்னு ... வாங்க நேயர்களே .. இவங்க காதலித்த காலங்களில் எங்க எல்லாம் ஊரு சுத்தினாங்க எப்படி எல்லாம் நேரத்த செலவு பண்ணினாங்கன்னு அவங்களே சொல்லுராங்க ... கேட்கலாம் ..


திருவாளர் : அப்போ லாம் நாங்க ரெண்டு பேரும் சுத்தாத தோப்பு கிடையாது .. ஏறாத மரம் கிடையாது ... திருடி திங்காத காய் பழம் கிடையாது ... நாங்க சுத்த ஆரம்பிச்சதே ... இவளுக்கு சூரியன் பட்ட செம்மஞ்சள் நிற மாங்காய் பறிக்க தான் ... அந்த தெரு வாண்டுகள் கிட்ட போட்டி போட்டு நான் அந்த மாங்காய பறிச்சி இவளுக்கு கொடுப்பேன் ...




திருமதி : எங்களோட பொழுதுபோக்கே நான் இவருக்கும் இவர் எனக்கும்மா பேன் பார்த்துகிட்டே பேசிகிட்டு இருக்குறது தான் .. எங்களுக்கு ரொம்ப பிடிச்ச போழுபோக்கும் அது தான் ...




வெட்டிமொக்கைகளோட மொக்கை போலவே இவங்களோட பொழுதுபோக்கும் ரொம்பவே வித்த்யாசமானதாய் இருந்தது அல்லவா நேயர்களே ... இவங்களோட காதல் இவங்களோட பெற்றோர்களுக்கு எப்படி தெரிந்ததுன்னு சொல்ல போறாங்க .. கேட்கலாம் வாங்க ..

திருவாளர்: ரொம்ப நாள் வரைக்கும் எங்களோட காதல் எங்க ரெண்டு பேர் வீட்டுக்கும் தெரியாது ... நாங்க பழகினத கூட அவங்க ஆரம்ப கால கட்டத்துல இயல்பானதா தான் எடுத்துகிட்டாங்க ... போக போக தான் எங்க மேல சந்தேகம் வந்தது ... அப்புறம் ஒரு வழியா எங்க மேட்டர் எங்க கூட்டத்துக்கு தெரிஞ்சி ஆதரவும் எதிர்ப்பும் சமமா இருந்தது ...

திருமதி: நான் ரொம்ப பயந்துகிட்டே இருந்தேன் ... எப்படி எல்லாரையும் சமாளிச்சி இவர திருமணம் பண்ணிக்கபோரோமொன்னு ...

காதல் என்றாலே ... எதிர்ப்புகள சமாளிச்சி தான் ஆகனும் ... இவங்க எப்படி சமாளிச்சாங்கன்னு இவங்களே சொல்லுறாங்க ... வாங்க இவங்க எப்படி சமாளிச்சாங்கன்னு கேக்கலாம் ...

திருவாளர்: எங்க வீட்டு சைடு அவ்வளவா எதிர்ப்பு இல்ல ... அவங்க வீட்டுல தான் எல்லாரையும் சமாளிக்க வேண்டி இருந்தது ... எல்லாருக்கும் மாங்கா தேங்கா பறிச்சி கொடுத்து ஒவொருத்தரா சரி கட்டி எல்லார் கிட்டவும் எங்க கல்யாணத்துக்கு அனுமதி வாங்கினோம் ... இவளோட அப்பா மட்டும் ஐந்து இளநீர் , ஏழு மாங்காயா தின்னுட்டு தான் ஒத்துகிட்டார் ...




திருமதி: எங்களோட திருமணம் ஒருவழியா நிச்சயமாகிடுச்சி ... எங்க ரெண்டு பேர் கூட்டத்துலயும் சேர்த்து மொத்தம் ஒரு ஐம்பத்துஅஞ்சு பேர் தான் ... எல்லாரையும் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்தே போயி தான் எங்களோட திருமணத்துக்கு நேரடியா அழைச்சோம் ...

துன்பத்திலும் இன்பம் என்பது இதுதானோ ... வாங்க இவங்க திருமணம் எப்படி நடந்ததுன்னு கேட்கலாம் ...

திருமதி : எங்களோட திருமணம அந்ததோப்பிலெயெ இருக்குற பெரிய மரத்த்துல தான் நடந்தது ... எல்லா சொந்தபந்தம் ன்னு எல்லாருமே வந்திருந்தாங்க ...




திருவாளர் : எங்களோட ஹனிமூன் க்கு நாங்க பக்கத்து தோப்புக்கு போனோம் ... அங்க கடலைக்காடு ... தென்னந்தோப்பு ... ன்னு நல்லா சுத்தினோம் ... அங்க ஒரு பெரிய குளம் இருந்தது .. அங்க டைவ் குளிச்சத எங்களால எப்பவுமே மறக்க முடியாது ...




இவங்க காதலிக்கும் போதும் சரி .. ஹநிமூன்லையும் சரி ரொம்ப நல்லாவே என்ஜாய் பண்ணி இருகாங்க ... இவங்கள பத்தி இவங்க பெற்றோர் என்ன சொல்றாங்கன்னு கேட்கலாம் வாங்க ...

திருவாளரின் பெற்றோர்: ஆரம்பத்துல இவங்க காதல்ல எங்களுக்கு உடன்பாடு இல்ல ... இவன் ரொம்பவே பிடிவாதமா இருந்ததால தான் நாங்க இந்த திருமணத்துக்கே சம்மதிச்சோம் ...




நாங்கள தேடி இருந்தா கூட இப்டி ஒரு மருமக எங்களுக்கு கிடைச்சிருக்க மாட்டா ...

திருமதியின் பெற்றோர்: எங்க மாப்பிள்ளையோட அன்பு தான் நாங்க இந்த திருமணத்துக்கு சம்மதிக்க காரணம் ... ( மாபிள்ள ... அந்த இளநீர மறந்திடாதிங்க ... )

திருவாளர் ரொம்ப சாமர்த்தியமா எல்லாரையும் சமாளிச்சி தான் இந்த திருமணத்திற்கே எல்லாரையும் சம்மதிக்க வைத்திருக்கார் ... வாங்க இவரோட திருமண வாழ்க்கை பற்றி இவர் சொல்லுறத கேட்கலாம் ...

திருவாளர் : எங்களோட திருமண வாழ்க்கை ரொம்ப நல்லா போயிட்டு இருக்கு ... இவர் தான் எங்க வீட்டு செல்லம் ... எங்க வாழ்க்கையின் அர்த்தமும் இவர் தான் எங்க செல்ல ஜுனியர் ...




திருமதி : இப்போவே இவன் எவ்ளோ சுட்டி தெரியுமா ... கொஞ்ச நேரம் சும்மாவே இருக்க மாட்டான் ... அவ்ளோ துறுதுறு ... மரத்துக்கு மரம் தாவிகிட்டு ... எல்லார்கிட்டவும் வம்பிழுத்துகிட்டு ...


இவங்க அன்பின் அடையாளமாய் ஜுனியர் ... இவங்க இன்று போல் என்றும் இனிமையாய் அன்புடன் பல்லாண்டு வாழ வாழ்த்துவோம் நேயர்களே ... மீண்டும் வேறொரு திருமண தம்பதிகளுடன் மீண்டும் சந்திப்போம் நேயர்களே
... பட்டு பேக் அகாடமி வழங்கும் நம்ம வீட்டு கல்யாணம் ...



Wednesday, October 21, 2009

நானும் எழுதறேன்

என்னையும் மொக்கை போட்டே தீரவேண்டுமென்று கட்டாயப் படுத்திய எனதருமை மொக்கைக் குடும்ப விளக்குகளுக்காக இந்தப் பதிவு.....!!!

வெட்டி மொக்கை என்ற பதத்தை யோசித்துப் பார்க்கிறேன்..!!! எத்தனை கருத்தாழமிக்க வார்த்தை..!!!

வள்ளுவர் போல், ஔவை போல் அறிவார்ந்த சிந்தனையாளர்களுக்கு மட்டுமே உதித்த வார்த்தை வெட்டி மொக்கை...!!


எதையும் வெட்டுவதற்குக் கை வேண்டும் , காலால் வெட்ட முடியாது...!!!

வெட்டி எறிவதற்கான கை எப்படி இருக்க வேண்டும்??

இந்த இடத்தில் தான் நீங்கள் யோசிக்க வேண்டும்??

வலக்கை, இடக்கை என்று இரண்டு கைகளும் மொத்தமாய்ச் சேர்ந்து வெட்டினால் அதன் பலமே தனி...!!

மொத்தமான கை வெட்டினால் அதன் விளைவுகளும் அபாரமாய் இருக்கும்..!!


வெட்டிய மொத்தமான கைகள்


வெட்டிய மொத்தக் கை

வெட்டி மொத்க் கை

வெட்டி மொக்கை என்று திரிந்து போனது...!!!


அதனால் வெட்டி மொக்கை என்பது அழிக்கும் சக்தி என்று நினைத்து விடாதீர்கள்...!!!!

அது ஆக்கும் சக்தி...!!! உருவாக்கும் சக்தி..!!


எப்படி என்று யோசிக்கிறீர்களா?

வெட் என்றால் ஈரம்

டி என்றால் தேநீர்

மொக் என்றால் நடித்தல்

கை என்றால் ஒரு வகை நியூசிலாந்து உணவு...!!

எனவே ஈரம் சொட்ட தேநீர் உண்பதாய் நடித்தால் கை என்ற நியூசிலாந்து உணவு கிடைக்கும் என்ற விரிவான பதமும் இதில் அடங்கியிருக்கிறது..>>!!

இதன் சுருக்கமான விளக்கத்தைச் சற்று விரிவாகவே இங்கு பார்க்கலாம்...!!

நம்து பிழைப்பிற்கான வழியைத் தேடினாலே உணவு நமக்கு நிரந்தரம் என்ற உன்னதமான க்ருத்தும் இந்த வெட்டி மொக்கை என்ற பதத்தினுள்ளே பதிந்து இருக்கிறது..!!!


வெட்டி மொக்கையைச் சற்று வெட்டிப் பார்ப்போமே...!!


ட் நீக்கினால் வெடி மொக்கை..!! சமூகத்தில் உள்ள மொக்கைத் தனங்களை வெடி வைத்துத் தகர்ப்போம் என்ற சமூக சிந்தனை அதில் தட்டுப் படுகிறது...!!!

ட்டி மொ வை நீக்கினால் வெக்கை...!!! உலகம் வெப்பமயமாவது பற்றிய விழிப்புணர்வு அதில் தென் படுகிறது...!!!

வெட்டி என்பதை மட்டும் எடுத்துக் கொண்டு அதைப் பிரித்தாராய்வோம்.

வெட் + ஈ வெட்டி. ஈரமான ஈ..!! இங்கு ஈ என்பது ஈதல் திறனைக் குறிப்பிடுகிறது..!!

ஈரமான மனதோடு ஈகைத் திறனும் மனிதருக்குத் தேவை என்ற ஒரு மகா தத்துவம் அதில் அடங்கியிருக்கிறது...!!


எனவே ஆன்றோரே ..!! சான்றோரே..!! ஆன்றோர் சான்றோர் போன்றோரே..!!

வெட்டி மொக்கை என்பது ஒன்றும் வெட்டி மொக்கை இல்லை என்பதை உணர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு..!!


முடிப்பதற்கு முன் ஒரு வார்த்தை சொல்லிக் கொள்ள ஆசைப் படுகிறேன்...!!

அது

தொடரும்..!!

Wednesday, October 14, 2009

உங்களை நீங்களே(அ)நண்பரை வைத்து கண்டுபிடிக்க 10 வழிகள்!!!




நம்ம மக்கள் அடிக்கடி சொல்லுறது உண்டு ..என்னை நானே மறந்துட்டேன் தெரியுமா ...அப்படி தன்னையே மறந்து போகும் அம்னிசியாகளுக்கு எனது இந்த பதிவை சமர்பிக்கிறேன்.

1)இது ரொம்ப எளிமையா வழி வேற என்ன அலாரம் வைத்து விட்டு மறப்பது

2)உங்க நண்பர் இயற்கை /கடவுள் இடம் சொல்லி மழை வர செய்யலாம்

3)நீங்கள் உணவு பிரியராய் இருந்தால் இந்த ஐடியா உதவும் உங்களுக்கு ...மதிய வேலையாய் பார்த்து உங்களை மறப்பது

4)ஏதேனும் பிரியாணி கடை வாசலில் உங்களை மறப்பது ...சைவ பிரியர்களுக்கு உதவா..

5)ட்ராபிக் சிக்னலில் உங்களை மறப்பது ..வண்டி வைத்து இருப்பவர்களுக்கு மட்டும்

6)காலை ,மாலை மற்றும் மதியம் சமையல் வேளை பார்த்து உங்களை மறப்பது திருமணம் ஆனவர்களுக்கு மட்டும்

7)குளிப்பதற்கு முன்னால் உங்களை மறப்பது ...நண்பர்களின்,மனைவியின் உதவியை நாடவும்

8)மாத கடைசியில் கடன்காரர் வரும் நேரம் பார்த்து மறப்பது 

9)மனைவிக்கு பிடித்ததை நாசம் செய்து விட்டு உங்களை மறப்பது (மனைவி வெளியே செல்லும் போது)

10)"Do Not Disturb" சேவையை பயன் படுத்தாத அலை பேசி சந்தா தாரர்கள் எப்பொழுது வேணும் என்றாலும் தன்னை மறக்கலாம் 

நிபந்தனைக்கு உட்பட்டது

௧)ஆண்களுக்கு மட்டும்
௨)மறக்க தெரிந்தவர்களுக்கு மட்டும்

டிஸ்கி:கருத்து சொல்லவில்லை என்றால் பதிவுகள் தொடரும்

இதுவும் நிபந்தனைக்கு உட்பட்டதே .


எப்டியாச்சும் காப்பாத்துங்க .... ப்ளீஸ் ...

அய்யயோ ....மொக்கை ... என் தூக்கமே போச்சே ...

கண்ண மூடினா ஒரே இருட்டு ..வாயை மூடினாலும் இருட்டு ..சரி ராத்திரி நேரம் அப்படி தான் இருக்கும்

கண்ண திறந்தா மேல பேன் சுத்தல கண்ணை மூடுனாலும் பேன் சுத்தலை ..சரி தலைல பேன் இருந்தாதானே?...

பவர்கட் ...ஆற்காடு வீராசாமி எங்க?

அப்டியே எழுந்து வெளில வந்தா அங்க அங்க கொஞ்சம் வெளிச்சம் தெரியுது ... தூரத்துல நாய் ஊளை இடுற சத்தம் (இந்த டயலாக எங்கயோ கேட்ட மாதிரியே இருக்குதுல்ல.) ...

அப்டியே ஒரு கொட்டாவி விட்டுட்டு மறுபடியும் வந்து படுத்து கண்ணமூடி ....

ஹையோ ... மொக்கை மொக்கை ..நானும் எல்லார் மாதிரியும் மொக்கை போடணும் ...

ஆனா என்ன மொக்கை? எப்படி மொக்கை?தெரியல..மொக்கை போடணும் மொக்கை போட்டே ஆகணும் . ...

ஏன்னா .....

எல்லாருமே மொக்கை .. மொக்கையோ மொக்கை. யுவ கிருஷ்ணா .. மொக்கை வால் பையன் .. மொக்கை கார்கி .. மொக்கை அதிஷா ... மொக்கை பரிசல் காரன் .. மொக்கை டோண்டு சார் , ஜ்யோவ்ராம் சுந்தர் , இட்லி வடை , இத்தாலி வடை ..............
(எப்பா இந்த லிஸ்ட் ரொம்ப நீளமா இருக்கே ... ஒரே கை வலி ) ...

வினவு பக்கம் போனா... வினவு பெரிய மொக்கை ..யாராவது இந்த லிங்க் ஐ வினவுட்ட குடுத்துருங்க ...எப்படியும் அவங்க எதிர் பதிவு எழுதினா நாங்க எங்கயோ போய்டுவோம் .

தப்பிச்சுரலாம் நு நினைக்காதீங்க ..நாங்க தனிமரம் இல்லை தோப்பு....

இந்த ஆண்ட்ரு சுபாஷு மட்டும் எப்படி தான் யோசிச்சி மொக்கை போடறாங்கன்னு தெரியல ... அவங்க போட போஸ்டிங்க எல்லாம் படிச்சா ... ஆ ஆ ஆ ஆ .... அவ்ளோ ரத்தம் வருது ...

யாராச்சும் சொல்லுங்க ப்ளீஸ் .... மொக்கை போடறது எப்புடி .... அய்யயோ ....

இதுல கோபி,எம்.கே.எஸ்,ஜாய் எல்லாம் வந்தா....நான் எப்படி மொக்கைவாதி ஆகுறது?

சரி இவங்க யாருன்னு கேக்குறீங்களா?அதான் சொன்னேனே ..நாங்க தனிமரம் இல்ல தோப்பு..

யாரும் மொக்கை போட tuition எடுக்குறீங்களா?

"மொக்கை மொக்கின் மொக்குக மொக்கால்
மொக்கின் கை சக்கை"

டிஸ்கி: டிஸ்கி என்றால் என்ன?

Monday, October 12, 2009

நான் உங்களை கொலை செய்யக்காரணம்???


இந்த கேள்விக்கு விடை தேடுவது பெரும் பெருத்தபாடாக உள்ளது..(பெருத்தபாடு என்றால் என்ன?..ஹையா அடுத்த தலைப்பு ரெடி)

சரி உங்களை எல்லாம் கொலை செய்யணும் என்று முடிவாகி விட்டது ..ஆனால் எப்படி?எங்கே?எப்பொழுது

கொலை செய்ய காரணம் வேண்டும்..ஆனால் என்னிடம் காரணம் இல்லை

சரி காரணம் இல்லாமல் கொலை செய்ய முடியுமா?சரி அப்படியே செய்தாலும் ..சக கைதி கேட்பானே அவனுக்கு காரணம் சொல்லி ஆக வேண்டுமே .

சொல்லாமல் போய் அவன் என்னை கொலை செய்து விட்டால்?

ஆக காரணத்தை தேடி அலைவது என்று முடிவாகி விட்டது ..

காரணத்தை எந்த திசையில் தேடுவது?ஆக திசை குறித்த ஆராய்ச்சியில் இறங்குவது என்று முடிவாகிற்று...

சரி ஆராய்ச்சி பயன் அளிக்குமா?ஆக ஆராய்ச்சிகள் குறித்து ஆராய்ச்சி செய்வது என்று முடிவாகி விட்டது ..

சரி ஆராய்ச்சி குறித்த ஆராய்ச்சி பயன் அளிக்குமா ?ஆக ஆராய்ச்சி குறித்த ஆராய்ச்சி முடிவுகள் குறித்து ஆராய்ச்சி செய்வது என்றாகி விட்டது ..

இறுதியில் பார்கையில் எல்லாம் ...என்ன ஒரு மொக்கை தனம்?

ஐ ..மொக்கை ...சரி இதை ஒரு மொக்கை பதிவாய் இட்டு விட வேண்டியது தான் என்று யோசித்து எல்லாவற்றையும் கோர்வை ஆக்கி வாசித்து பார்க்கையில் ..."எனக்கே சிறிது இரத்தம் வந்து விட்டது "

ஆக மொத்தம் எப்படியோ உங்களை கொலை செய்ய வழி கிடைத்தாகி கிடைத்தாகி விட்டது ..

எப்படியாவது இந்த பதிவு hit ஆகிடனும் ..இல்லை நான் கொலைகாரனா மாறிடுவேன்..

Friday, October 9, 2009

பாரதியின் ஜாதி உணர்வு -பகுதி 3

ஆராய்ச்சியாளர் : எம்.கே.எஸ், பிரபு, நண்பன் கோபி, ஆண்ட்ரு சுபாசு, ஜாய் மற்றும் பலர்


பிரபு:

சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேர நன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்

இந்த பிரபலமான பாடலில் உள்ள மொக்கையான எண்ணம் பாருங்கள்.
அவருக்கு சிந்து நதி (வடக்கே) வேண்டுமாம். சேர நாடு (கேரளா) வேண்டுமாம். பின் சுந்தர தெலுங்கு.

இங்கு ஆய்வுக்கு உரியது 'சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து எனும் வரி'.
'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல இனிதாவது எங்கும் காணோம்' என்று தமிழை இனிது என்று கூறிய பின் இனிய மொழியில் பாடுவேண்டுமா இல்லை அழகான மொழியிலா? அழகான மொழி என்றால் எழுதுவதோடு நிற்க வேண்டும். ஏன் பாட வேண்டும்?
இந்த கேள்விக்கு சுமார் 600 நொடிகள் தீவிர சிந்தனையின் பின் விடை கிடைத்தது.
இசை என்றால் கர்நாடக இசை(தெலுங்கு கீர்த்தனை) என்று ஒரு பிம்பத்தை உண்டாக்கி இருக்கின்றனர். பாரதியும் அதற்கு தூபம் போடுகிறார்!
தொக்கி நிற்கும் கேள்விகள்?
௧. தமிழிசை பற்றி அவர் கேள்வி பட்டதில்லையா?
௨. கர்நாடக இசை என்பதே தமிழ்ப் பண்களை அடிப்படையாக கொண்டு உருவான Bachchaa என்பது தெரியாதா?
௩. சுந்தரம் என்பவர் அவர் நண்பரோ?

அடுத்து நாம் மொக்கி எடுக்கப் போகும் வரிகள்

கங்கை நதிப்புறத்து கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளுவோம்


இது பார்க்க சாதுவான வரிகள் போல் இருக்கும்.ஆனால் பாரதி கூறும் பொருள் இதோ:
கங்கை நதிப்புறத்து கோதுமைப் பண்டம்: தென்னாடு அரிசி உணவை முதன்மையாய் கொண்டது. வடநாடு கோதுமையை. வட நாட்டு கோதுமை இங்கு வந்ததன் விளைவு நாம் அரிசியை பயிரிட முடியாமல் போயிற்று. இன்று தமிழ்நாட்டில் நாம் அரிசியை இறக்குமதி செய்கிறோம்.

காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளுவோம்:

வெற்றிலை! ஆ!! இந்த வார்த்தை கேட்டாலே எச்சில் ஊறும் அந்த கால ஆட்களுக்கு. சிறு வயதில் வெற்றிலை போட்டால் சரஸ்வதி abscond ஆகி விடுவார் என்று வீட்டில் திட்டுவது உண்டு...ஆனால் பெரியவர்கள் மட்டும் விதவிதமாக வெற்றிலை போட்டுக் கொள்வார்கள். நமது பிரச்சனை இதுவல்ல.

முந்தைய வரிக்கு விளக்கம் கொடுத்துள்ளோம் தக்க சான்றுகளுடன். ஆக வட நாட்டவர் தரும் கோதுமைக்கு நாம் தருவது வெற்றிலை. இங்கு இருக்கும் வெற்றிலை எல்லாம் தந்து விட்டதால், நம்மிடம் பாக்கு, சுண்ணாம்பு மற்றும் புகையிலை மீதி இருந்தது. சுண்ணாம்பை வீட்டிற்கு அடிக்கலாம். புகையிலை என்ன செய்வது. வேறு வழியில்லை என்று புகையிலை மட்டும் பயன்படுத்த ஆரம்பித்தனர். அதன் விளைவு புகையிலை(முன்னோர் தலைமுறை) பீடியாக(சென்ற தலைமுறை) மாறி இன்று சிகரெட்(நம் தலைமுறை) என்று உருமாறி நம் இளைஞர்களை கெடுத்துக் கொண்டிருக்கிறது.(டாஸ்மாக் சமாச்சாரமும் பாரதியார் உபயம் என்றே கேள்விப்பட்டுள்ளேன்.உண்மையா?) இது நடக்குமா என்ற சந்தேகம் வேண்டாம். இது நடந்த உண்மை என்று நேற்று 'அன்னபட்சி' ஜோசியம் பார்த்ததில் தெரிந்தது.

( எச்சரிக்கை: புகையிலை உடல்நலத்தை கெடுக்கும்)

பாரதியின் ஜாதி உணர்வு -பகுதி 2

ஆராய்ச்சியாளர் : எம்.கே.எஸ்,Prabhu,நண்பன் கோபி,ஆண்ட்ரு சுபாசு,ஜாய் மற்றும் பலர்
 
Prabhu:

பாப்பா - இந்த வார்த்தையை ஆராயுங்களேன். பா + பா = பாப்பா

பா என்றால் பாட்டு;
இரண்டு முறை பா பா என்றால் பாட்டுக்குப் பாட்டு;


நாம் பாட்டுக்குப் பாட்டு ஆட ஓடிச் செல்ல வேண்டும்..வெற்றி பெற ஓய்வில்லாமல் பாட்டு மொக்கை இட வேண்டும்.
கூடி விளையாடு பாப்பா - குறைந்தது ஆட இருவர் வேண்டும்.


குழந்தையை வையாதே பாப்பா - சரியான பாடல் பாடவில்லை என்றால் வையக் கூடாது.
இது தான் உள் அர்த்தம்.

நண்பன் கோபி:

அப்படி பார்த்தல் காணி நிலம் வேண்டும் என்று பாடியிருக்காரே..

.குருவி ,காகம் எல்லாம் மேலே இருக்கு எனவே அதனை பற்றி பாடி தன் உயர் சாதிவெறியை பாரதி காட்டுகிறார் என்றால்...கீழே இருக்கும் நிலமும் வேண்டும் என்பதில் இருந்து அடித்தட்டு மக்களும் எனக்கு வேண்டும் என்று சொல்லும் பாரதிக்கு சாதி வெறி இல்லை என்று கூறுகிறேன்....


Prabhu:

'நீள் கடலும் வானும் எங்கள் கூட்டம்' என்று எல்லாவற்றையும் வளைத்து போடும் ஒரு சர்வாதிகாரி தான் பாரதியார். 

நண்பன் கோபி:

இந்த ஞாலமும் பொய்களே...வெறும் காட்சி பிழைதானே ..

என்ற வரியை உற்று நோக்குங்கள் உலகமே ஒரு மாயம் என்று சொல்லும் பாரதி எப்படி ஒரு சர்வாதிகாரியாக இருக்க முடியும்..?

எம்.கே.எஸ்:

அவ்ர் தாழ்த்தப்பட்டவர்களை மணதில் வைத்து பாடி இருந்தல் ஓடி விளையாடு ளிர் என்று ஆராம்பித்து இருக்கலாம். பாப்பா என்று பா வரிசையில் ஏன் பாட வேண்டும் ?

நானும் ஒரு பார்பானன் என்று சொல்லத்தானே ?

இல்லை பொதுவக க்களை பற்றி பாடி இருந்தால் ழலை என்று ஆராம்பித்து இருக்கலாம் இல்லையா?

Prabhu:

நீங்கள் சொல்வது உண்மை தான். உலகம்(நிலம்) பொய் தான். அதனால் தான் அதில் ஒரு சிறு பகுதியைக்(காணி) கேட்டார். ஆனால் கடலும் வானமும் முழுதும் வேண்டும் என்றார். ஏன் என்றால் அவை பொய் இல்லையே. மேலும் வானத்து பறவைகளையே தன் ஜாதி என்றார்.


பாரதியார் மாயைக்கு எதிரானவர். சரியான வரிகள்
"இந்த ஞாலமும் பொய் தானோ? வெறும் காட்சிப் பிழை தானோ?"
இந்த பாடல் அவர் காலத்தில் வேகமாக பரவி வந்த அத்வைத கருத்தை எதிர்த்து வந்தது. இதை அவர் இந்த பாடலுக்கான முன்னுரையில் எழுதி உள்ளார்.

எம்.கே.எஸ்:

இதில் உள்ள சூச்சுமம் உங்களுக்கு புரியவில்லை...காணி நிலதில் இராண்டு எழுத்துமே நேடில் (நீண்ட..மேல் என்று எடுத்து கொள்ளுங்கள்) ஏன் காணிக்கு பதிலாக குறில் எழுத்து வரும் வார்த்தைகள் சில இருக்க நேடில் வார்த்தகளை ஏன் பயன்படித்த வேண்டும் ? வார்த்தைகளில் கூட உயர்வு தாழ்வு பார்க்கும் வழக்கம் உடையவர்.

பாரதியின் ஜாதி உணர்வு தொடரும்..

பாரதியின் ஜாதி உணர்வு -பகுதி 1


பாரதியின் ஜாதி உணர்வு



ஆராய்ச்சியாளர்கள் : எம்.கே.எஸ், பிரபு, நண்பன் கோபி, ஆண்ட்ரு சுபாசு, ஜாய் ... மற்றும் பலர் ...

எம்.கே.எஸ்: பாரதிக்கு ஜாதி உணர்வு இல்லை என்று சொல்ல முடியாது. ஏன் எனில் காக்கை, குருவி எங்கள் ஜாதி என்று பாடி இருக்கிறார். காக்கை, குருவிகள் உயரே பறப்பவை. ஆடு, மாடு கீழே மேய்பவை. ஆகையால் தான் ஆடு, மாடு பற்றி பாடவில்லை காக்கை, குருவிகள் பற்றி பாடி தன் உயர் ஜாதி என்று கூறி இருக்கிறார்.

நண்பன் கோபி:

மொக்கை மன்னன் எம் .கே.எஸ்..

நீங்க சொல்வதை வைத்து நான் வேறு விதமாக செய்த ஆராயிச்சியில் எனக்கு ஒரு உண்மை தோன்றியது ... .பாரதியார் உயர் சாதியினை தூக்கி பிடித்திருந்தால் ....ஓடி விளையாடு பாப்பான் !என்றுதானே பாடியிருக்க வேண்டும். அவர் ஓடி விளையாடு பாப்பா என்றுதானே பாடியிருக்கிறார் .இதிலிருந்து அவர் சாதி குறித்து எழுத வில்லை என்பது தெளிவாக தெரிகிறதே....

ஜாய்:

பார்பான் என்பது ஆண்பாலை குறிக்கும்..
பாப்பாத்தி என்பது பெண்பாலை குறிக்கும்..

இரண்டுக்கும் பொதுவாக குறிப்பிட‌ வேண்டிய காரணத்தால் பாப்பா என்ற பதத்தை பாரதி பயன்படுத்தினான்..

எனவே பாரதி சாதிகுறித்து தான் எழுதினான் என்ற MKSன் ஆராய்ச்சி ஏற்கத்தகுந்ததே..


பாரதியின் ஜாதி உணர்வு தொடரும்..

ஆராயிச்சிகள் தொடரும்.....