Friday, October 9, 2009

பாரதியின் ஜாதி உணர்வு -பகுதி 1


பாரதியின் ஜாதி உணர்வு



ஆராய்ச்சியாளர்கள் : எம்.கே.எஸ், பிரபு, நண்பன் கோபி, ஆண்ட்ரு சுபாசு, ஜாய் ... மற்றும் பலர் ...

எம்.கே.எஸ்: பாரதிக்கு ஜாதி உணர்வு இல்லை என்று சொல்ல முடியாது. ஏன் எனில் காக்கை, குருவி எங்கள் ஜாதி என்று பாடி இருக்கிறார். காக்கை, குருவிகள் உயரே பறப்பவை. ஆடு, மாடு கீழே மேய்பவை. ஆகையால் தான் ஆடு, மாடு பற்றி பாடவில்லை காக்கை, குருவிகள் பற்றி பாடி தன் உயர் ஜாதி என்று கூறி இருக்கிறார்.

நண்பன் கோபி:

மொக்கை மன்னன் எம் .கே.எஸ்..

நீங்க சொல்வதை வைத்து நான் வேறு விதமாக செய்த ஆராயிச்சியில் எனக்கு ஒரு உண்மை தோன்றியது ... .பாரதியார் உயர் சாதியினை தூக்கி பிடித்திருந்தால் ....ஓடி விளையாடு பாப்பான் !என்றுதானே பாடியிருக்க வேண்டும். அவர் ஓடி விளையாடு பாப்பா என்றுதானே பாடியிருக்கிறார் .இதிலிருந்து அவர் சாதி குறித்து எழுத வில்லை என்பது தெளிவாக தெரிகிறதே....

ஜாய்:

பார்பான் என்பது ஆண்பாலை குறிக்கும்..
பாப்பாத்தி என்பது பெண்பாலை குறிக்கும்..

இரண்டுக்கும் பொதுவாக குறிப்பிட‌ வேண்டிய காரணத்தால் பாப்பா என்ற பதத்தை பாரதி பயன்படுத்தினான்..

எனவே பாரதி சாதிகுறித்து தான் எழுதினான் என்ற MKSன் ஆராய்ச்சி ஏற்கத்தகுந்ததே..


பாரதியின் ஜாதி உணர்வு தொடரும்..

ஆராயிச்சிகள் தொடரும்.....

3 comments:

  1. நமது புகழ் உலகமெல்லாம் பரவ வாழ்த்துகள்

    ReplyDelete
  2. நிச்சயமாக நரேன் ... அதுக்கெல்லாம் நீங்க உருப்படியா மொக்கை போடணும் சரியா ... :-)

    ReplyDelete
  3. சிந்து நதியின் மிசை நிலவினிலே
    சேர நன்னாட்டிளம் பெண்களுடனே
    சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
    தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்//
    -------------->
    ஜாதிய உணர்வு உள்ளவர்கள் கீர்த்தனைகள் என்கிற பெயரில் , சாமனியனுக்கு புரியாத பாசையில் பாடி வந்த காலத்திலேயே , படகு சவாரியின் பொது பாடும் இந்த பாடல் , உழைக்கும் மற்றும் கீழ்த்தட்டு மக்களிடையே பரவியுள்ளது !

    இதற்க்கு சான்றாக , "நாயகன் " திரைப்படத்தில் வரும் "நிலா அது வானத்துமேலே , என்கிற பாடலை நினைவு கூறுங்கள் !
    பாரதி பாடியமாதிரிய் , வேலு நாயக்கரும் மற்றும் அவரின் நண்பரும் படகு சவாரியின் போது பாடும் இந்த பாடலே சான்று , பாரதியின் பாடல்கள் கீழ்த்தட்டு மக்களுக்கானது ௧ உயர் சாதியினர் அதற்க்கு உரிமை கொண்டாட முடியாது !

    ReplyDelete