ஆராய்ச்சியாளர் : எம்.கே.எஸ்,Prabhu,நண்பன் கோபி,ஆண்ட்ரு சுபாசு,ஜாய் மற்றும் பலர்
Prabhu:
பாப்பா - இந்த வார்த்தையை ஆராயுங்களேன். பா + பா = பாப்பா
பா என்றால் பாட்டு;
இரண்டு முறை பா பா என்றால் பாட்டுக்குப் பாட்டு;
நாம் பாட்டுக்குப் பாட்டு ஆட ஓடிச் செல்ல வேண்டும்..வெற்றி பெற ஓய்வில்லாமல் பாட்டு மொக்கை இட வேண்டும்.
கூடி விளையாடு பாப்பா - குறைந்தது ஆட இருவர் வேண்டும்.
குழந்தையை வையாதே பாப்பா - சரியான பாடல் பாடவில்லை என்றால் வையக் கூடாது.
இது தான் உள் அர்த்தம்.
நண்பன் கோபி:
அப்படி பார்த்தல் காணி நிலம் வேண்டும் என்று பாடியிருக்காரே..
.குருவி ,காகம் எல்லாம் மேலே இருக்கு எனவே அதனை பற்றி பாடி தன் உயர் சாதிவெறியை பாரதி காட்டுகிறார் என்றால்...கீழே இருக்கும் நிலமும் வேண்டும் என்பதில் இருந்து அடித்தட்டு மக்களும் எனக்கு வேண்டும் என்று சொல்லும் பாரதிக்கு சாதி வெறி இல்லை என்று கூறுகிறேன்....
Prabhu:
'நீள் கடலும் வானும் எங்கள் கூட்டம்' என்று எல்லாவற்றையும் வளைத்து போடும் ஒரு சர்வாதிகாரி தான் பாரதியார்.
நண்பன் கோபி:
இந்த ஞாலமும் பொய்களே...வெறும் காட்சி பிழைதானே ..
என்ற வரியை உற்று நோக்குங்கள் உலகமே ஒரு மாயம் என்று சொல்லும் பாரதி எப்படி ஒரு சர்வாதிகாரியாக இருக்க முடியும்..?
எம்.கே.எஸ்:
அவ்ர் தாழ்த்தப்பட்டவர்களை மணதில் வைத்து பாடி இருந்தல் ஓடி விளையாடு தளிர் என்று ஆராம்பித்து இருக்கலாம். பாப்பா என்று பா வரிசையில் ஏன் பாட வேண்டும் ?நானும் ஒரு பார்பானன் என்று சொல்லத்தானே ?
இல்லை பொதுவக மக்களை பற்றி பாடி இருந்தால் மழலை என்று ஆராம்பித்து இருக்கலாம் இல்லையா?
Prabhu:
நீங்கள் சொல்வது உண்மை தான். உலகம்(நிலம்) பொய் தான். அதனால் தான் அதில் ஒரு சிறு பகுதியைக்(காணி) கேட்டார். ஆனால் கடலும் வானமும் முழுதும் வேண்டும் என்றார். ஏன் என்றால் அவை பொய் இல்லையே. மேலும் வானத்து பறவைகளையே தன் ஜாதி என்றார்.
பாரதியார் மாயைக்கு எதிரானவர். சரியான வரிகள்
"இந்த ஞாலமும் பொய் தானோ? வெறும் காட்சிப் பிழை தானோ?"
இந்த பாடல் அவர் காலத்தில் வேகமாக பரவி வந்த அத்வைத கருத்தை எதிர்த்து வந்தது. இதை அவர் இந்த பாடலுக்கான முன்னுரையில் எழுதி உள்ளார்.
எம்.கே.எஸ்:
இதில் உள்ள சூச்சுமம் உங்களுக்கு புரியவில்லை...காணி நிலதில் இராண்டு எழுத்துமே நேடில் (நீண்ட..மேல் என்று எடுத்து கொள்ளுங்கள்) ஏன் காணிக்கு பதிலாக குறில் எழுத்து வரும் வார்த்தைகள் சில இருக்க நேடில் வார்த்தகளை ஏன் பயன்படித்த வேண்டும் ? வார்த்தைகளில் கூட உயர்வு தாழ்வு பார்க்கும் வழக்கம் உடையவர்.
பாரதியின் ஜாதி உணர்வு தொடரும்..
loose talk.. please stop this blog
ReplyDeleteother wise i will complaint to google,, useless fellows
ReplyDelete