ஆராய்ச்சியாளர் : எம்.கே.எஸ், பிரபு, நண்பன் கோபி, ஆண்ட்ரு சுபாசு, ஜாய் மற்றும் பலர்
பிரபு:
சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேர நன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்
இந்த பிரபலமான பாடலில் உள்ள மொக்கையான எண்ணம் பாருங்கள்.
அவருக்கு சிந்து நதி (வடக்கே) வேண்டுமாம். சேர நாடு (கேரளா) வேண்டுமாம். பின் சுந்தர தெலுங்கு.
இங்கு ஆய்வுக்கு உரியது 'சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து எனும் வரி'.
'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல இனிதாவது எங்கும் காணோம்' என்று தமிழை இனிது என்று கூறிய பின் இனிய மொழியில் பாடுவேண்டுமா இல்லை அழகான மொழியிலா? அழகான மொழி என்றால் எழுதுவதோடு நிற்க வேண்டும். ஏன் பாட வேண்டும்?
இந்த கேள்விக்கு சுமார் 600 நொடிகள் தீவிர சிந்தனையின் பின் விடை கிடைத்தது.
இசை என்றால் கர்நாடக இசை(தெலுங்கு கீர்த்தனை) என்று ஒரு பிம்பத்தை உண்டாக்கி இருக்கின்றனர். பாரதியும் அதற்கு தூபம் போடுகிறார்!
தொக்கி நிற்கும் கேள்விகள்?
௧. தமிழிசை பற்றி அவர் கேள்வி பட்டதில்லையா?
௨. கர்நாடக இசை என்பதே தமிழ்ப் பண்களை அடிப்படையாக கொண்டு உருவான Bachchaa என்பது தெரியாதா?
௩. சுந்தரம் என்பவர் அவர் நண்பரோ?
அடுத்து நாம் மொக்கி எடுக்கப் போகும் வரிகள்
கங்கை நதிப்புறத்து கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளுவோம்
இது பார்க்க சாதுவான வரிகள் போல் இருக்கும்.ஆனால் பாரதி கூறும் பொருள் இதோ:
கங்கை நதிப்புறத்து கோதுமைப் பண்டம்: தென்னாடு அரிசி உணவை முதன்மையாய் கொண்டது. வடநாடு கோதுமையை. வட நாட்டு கோதுமை இங்கு வந்ததன் விளைவு நாம் அரிசியை பயிரிட முடியாமல் போயிற்று. இன்று தமிழ்நாட்டில் நாம் அரிசியை இறக்குமதி செய்கிறோம்.
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளுவோம்:
வெற்றிலை! ஆ!! இந்த வார்த்தை கேட்டாலே எச்சில் ஊறும் அந்த கால ஆட்களுக்கு. சிறு வயதில் வெற்றிலை போட்டால் சரஸ்வதி abscond ஆகி விடுவார் என்று வீட்டில் திட்டுவது உண்டு...ஆனால் பெரியவர்கள் மட்டும் விதவிதமாக வெற்றிலை போட்டுக் கொள்வார்கள். நமது பிரச்சனை இதுவல்ல.
முந்தைய வரிக்கு விளக்கம் கொடுத்துள்ளோம் தக்க சான்றுகளுடன். ஆக வட நாட்டவர் தரும் கோதுமைக்கு நாம் தருவது வெற்றிலை. இங்கு இருக்கும் வெற்றிலை எல்லாம் தந்து விட்டதால், நம்மிடம் பாக்கு, சுண்ணாம்பு மற்றும் புகையிலை மீதி இருந்தது. சுண்ணாம்பை வீட்டிற்கு அடிக்கலாம். புகையிலை என்ன செய்வது. வேறு வழியில்லை என்று புகையிலை மட்டும் பயன்படுத்த ஆரம்பித்தனர். அதன் விளைவு புகையிலை(முன்னோர் தலைமுறை) பீடியாக(சென்ற தலைமுறை) மாறி இன்று சிகரெட்(நம் தலைமுறை) என்று உருமாறி நம் இளைஞர்களை கெடுத்துக் கொண்டிருக்கிறது.(டாஸ்மாக் சமாச்சாரமும் பாரதியார் உபயம் என்றே கேள்விப்பட்டுள்ளேன்.உண்மையா?) இது நடக்குமா என்ற சந்தேகம் வேண்டாம். இது நடந்த உண்மை என்று நேற்று 'அன்னபட்சி' ஜோசியம் பார்த்ததில் தெரிந்தது.
( எச்சரிக்கை: புகையிலை உடல்நலத்தை கெடுக்கும்)
பெயர்:
ReplyDeleteபாரதியார்
கேள்வி:
பாரதி யார்?
வடை அதாம்பா விடை:
பாரதி = பார் + அதி
விளக்கம்:
பார் = பார்பான்
அதி = அதிபன் @ தலைவன்
எனவே பாரதி என்றால் பார்ப்பனர்களின் தலைவன் என்று பொருள்.எந்த அளவிற்கு சமூகப்பற்று இருந்தால் தன பெயரை இவ்வாறு மாற்றி இருப்பார் பாரதி.என்ன கொடுமை இது.
அடேய் முட்டாள்
Deleteஅவருடைய உண்மையான பெயர் பாரதியார்
அவர் இளம் வயதிலே கவிபுலமை பெற்றிந்ததால் அவருக்கு அப்பெயரை வழங்கினார்கள்
Ungala ellam tiruta mudiadu
ReplyDeleteவெட்டி பயலோ தான்
ReplyDeleteRead your comments very unfortunate you people always having mind set of you are the best one
ReplyDelete