Wednesday, October 21, 2009

நானும் எழுதறேன்

என்னையும் மொக்கை போட்டே தீரவேண்டுமென்று கட்டாயப் படுத்திய எனதருமை மொக்கைக் குடும்ப விளக்குகளுக்காக இந்தப் பதிவு.....!!!

வெட்டி மொக்கை என்ற பதத்தை யோசித்துப் பார்க்கிறேன்..!!! எத்தனை கருத்தாழமிக்க வார்த்தை..!!!

வள்ளுவர் போல், ஔவை போல் அறிவார்ந்த சிந்தனையாளர்களுக்கு மட்டுமே உதித்த வார்த்தை வெட்டி மொக்கை...!!


எதையும் வெட்டுவதற்குக் கை வேண்டும் , காலால் வெட்ட முடியாது...!!!

வெட்டி எறிவதற்கான கை எப்படி இருக்க வேண்டும்??

இந்த இடத்தில் தான் நீங்கள் யோசிக்க வேண்டும்??

வலக்கை, இடக்கை என்று இரண்டு கைகளும் மொத்தமாய்ச் சேர்ந்து வெட்டினால் அதன் பலமே தனி...!!

மொத்தமான கை வெட்டினால் அதன் விளைவுகளும் அபாரமாய் இருக்கும்..!!


வெட்டிய மொத்தமான கைகள்


வெட்டிய மொத்தக் கை

வெட்டி மொத்க் கை

வெட்டி மொக்கை என்று திரிந்து போனது...!!!


அதனால் வெட்டி மொக்கை என்பது அழிக்கும் சக்தி என்று நினைத்து விடாதீர்கள்...!!!!

அது ஆக்கும் சக்தி...!!! உருவாக்கும் சக்தி..!!


எப்படி என்று யோசிக்கிறீர்களா?

வெட் என்றால் ஈரம்

டி என்றால் தேநீர்

மொக் என்றால் நடித்தல்

கை என்றால் ஒரு வகை நியூசிலாந்து உணவு...!!

எனவே ஈரம் சொட்ட தேநீர் உண்பதாய் நடித்தால் கை என்ற நியூசிலாந்து உணவு கிடைக்கும் என்ற விரிவான பதமும் இதில் அடங்கியிருக்கிறது..>>!!

இதன் சுருக்கமான விளக்கத்தைச் சற்று விரிவாகவே இங்கு பார்க்கலாம்...!!

நம்து பிழைப்பிற்கான வழியைத் தேடினாலே உணவு நமக்கு நிரந்தரம் என்ற உன்னதமான க்ருத்தும் இந்த வெட்டி மொக்கை என்ற பதத்தினுள்ளே பதிந்து இருக்கிறது..!!!


வெட்டி மொக்கையைச் சற்று வெட்டிப் பார்ப்போமே...!!


ட் நீக்கினால் வெடி மொக்கை..!! சமூகத்தில் உள்ள மொக்கைத் தனங்களை வெடி வைத்துத் தகர்ப்போம் என்ற சமூக சிந்தனை அதில் தட்டுப் படுகிறது...!!!

ட்டி மொ வை நீக்கினால் வெக்கை...!!! உலகம் வெப்பமயமாவது பற்றிய விழிப்புணர்வு அதில் தென் படுகிறது...!!!

வெட்டி என்பதை மட்டும் எடுத்துக் கொண்டு அதைப் பிரித்தாராய்வோம்.

வெட் + ஈ வெட்டி. ஈரமான ஈ..!! இங்கு ஈ என்பது ஈதல் திறனைக் குறிப்பிடுகிறது..!!

ஈரமான மனதோடு ஈகைத் திறனும் மனிதருக்குத் தேவை என்ற ஒரு மகா தத்துவம் அதில் அடங்கியிருக்கிறது...!!


எனவே ஆன்றோரே ..!! சான்றோரே..!! ஆன்றோர் சான்றோர் போன்றோரே..!!

வெட்டி மொக்கை என்பது ஒன்றும் வெட்டி மொக்கை இல்லை என்பதை உணர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு..!!


முடிப்பதற்கு முன் ஒரு வார்த்தை சொல்லிக் கொள்ள ஆசைப் படுகிறேன்...!!

அது

தொடரும்..!!

4 comments:

  1. வெட்டி என்பதை மட்டும் எடுத்துக் கொண்டு அதைப் பிரித்தாராய்வோம்.

    வெட் + ஈ வெட்டி. ஈரமான ஈ..!! இங்கு ஈ என்பது ஈதல் திறனைக் குறிப்பிடுகிறது..!!

    ஈரமான மனதோடு ஈகைத் திறனும் மனிதருக்குத் தேவை என்ற ஒரு மகா தத்துவம் அதில் அடங்கியிருக்கிறது...!!//

    நான் ரொம்ப நனைந்து விட்டேன்..எனவே ஆன்றோரே சான்றோரே சீக்கிரம் வெடி மொக்கை மழையில் குளிக்க வாரீர்

    ReplyDelete
  2. தமிழ்நாட்டில் தான் மழை பெய்யலேன்னா, நம்ம வெட்டி மொக்கை மழையில் குளிக்கவும் ஒரு ஈ, காக்கையைக் காணோம்

    ReplyDelete
  3. வெட்டி மொக்கையில் இவ்வளவு மேட்டரா?

    ReplyDelete
  4. யோவ் நீ உருப்படுவியாயா... வெட்டி மொக்கைன்ற ஒரு வார்த்தைக்கே இவ்ளோ நீளமா மொக்கை போட்றியே நியாயமாயா...
    இதுல எதுக்குயா வள்ளுவரும் ஔவையாரும் அவங்க என்னய்யா பாவம் பண்ணாங்க...
    திட்டலாம்னு நெனைச்சா சிப்புதான் வருது..
    கலக்குயா... நல்லவேளை உலக மக்கள் எல்லாருக்கும் தமிழ் தெரியாது இல்லன்னா தமிழ் மானம் ராக்கெட் ஏறி இருக்கும்

    ReplyDelete